தூய லூர்து அன்னை ஆலய ஆண்டு விழா


தூய லூர்து அன்னை ஆலய ஆண்டு விழா
x
தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 3:56 PM IST)
t-max-icont-min-icon

தூய லூர்து அன்னை ஆலய ஆண்டு விழா

நாகப்பட்டினம்

நாகையில் பிரசித்தி பெற்ற தூய லூர்து அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு விழா கடந்த 3-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. விழாவில் நேற்று சிறிய தேர் பவனி நடந்து வருகிறது. அப்போது தூய லூர்து அன்னை தேரில் எழுந்தருளினார். தேர்பவனி முக்கிய வீதிகள் வலம் வந்து ஆலயத்தை வந்தடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு அன்னையை பிரார்த்தனை செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி வருகிற 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.


Next Story