அரக்கோணத்தில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

அரக்கோணத்தில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
அரக்கோணம்
அரக்கோணத்தில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
அரக்கோணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் போதை பொருள் ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மருத்துவ அணி செயலாளர் சிக்கந்தர் பாஷா தலைமை தாங்கினார். நகர தலைவர் ஜெய்னுலாப்தின் முன்னிலை வகித்தார். ஜோதி நகர் இந்திராகாந்தி சிலை அருகில் இருந்து தொடங்கி பழைய பஸ் நிலையம் வரை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர் அன்சாரி, மாவட்ட தலைவர் இப்ராஹீம் ஆகியோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
ஊர்வலத்தில் போதை பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். மாவட்ட மருத்துவ அணி செயலாளர் முகமது ஜாபர், மாவட்ட செயலாளர் அஜய் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுலைமான் நன்றி கூறினார்.