புகையிலை எதிர்ப்பு தின மனிதச்சங்கிலி


புகையிலை எதிர்ப்பு தின மனிதச்சங்கிலி
x

தென்காசியில் புகையிலை எதிர்ப்பு தின மனிதச்சங்கிலி நடந்தது.

தென்காசி

தென்காசி:

தென்காசி மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் துறை மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் முன்பு நேற்று மாலை மனிதச்சங்கிலி நடைபெற்றது. செஞ்சிலுவை சங்க பொருளாளர் கருப்பையா தலைமை தாங்கினார்‌. மாஸ் பாரா மெடிக்கல் கல்லூரி நிறுவனர் அன்சாரி முன்னிலை வகித்தார். மாவட்ட நிர்வாக கமிட்டி உறுப்பினர் சந்திரசேகரன் வரவேற்றார். டாக்டர் தண்டபாணி புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தார்.

செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி, மாஸ் கம்யூனிட்டி மற்றும் பாரா மெடிக்கல் கல்லூரி, குற்றாலம் பராசக்தி பெண்கள் கல்லூரி ஆகிய கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களது கைகளில் புகையிலை எதிர்ப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி நின்றனர். நிகழ்ச்சியில் குற்றாலம் கல்லூரி பேராசிரியைகள் பார்வதி, சண்முகசுந்தரி, செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் செந்தில்குமார், சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் செஞ்சிலுவை சங்க செயலாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.


Next Story