கபீர் புரஸ்கார் விருதுபெற விண்ணப்பிக்கலாம்


கபீர் புரஸ்கார் விருதுபெற விண்ணப்பிக்கலாம்
x

கபீர் புரஸ்கார் விருதுபெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருச்சி

தமிழக முதல்-அமைச்சரால் குடியரசு தின விழாவின் போது ஆண்டுதோறும் "கபீர் புரஸ்கார் விருது" வழங்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் (ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத் துறை மற்றும் அரசு பணியாளர்கள் ஆகியோர்கள் நீங்கலாக) விண்ணப்பிக்கலாம். இந்த விருது ஒரு சாதி, இனம், வகுப்பைச் சார்ந்தவர்கள் பிற சாதி, இன வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது. மேற்காணும் விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை http://awards.tn.gov.in மற்றும் www.sdat.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த படிவத்தினை தொடர்புடைய ஆவணங்களுடன் விரிவான அறிக்கையை 3 பிரதிகளுடன் வருகிற 12-ந்தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டு அரங்கத்தை தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.


Next Story