புதிய தொழிற்பயிற்சி நிலையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்

புதிய தொழிற்பயிற்சி நிலையம் தொடங்க விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்குதல், அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழிற்பிரிவுகள், கூடுதல் அலகுகள் தொடங்குதல் மற்றும் இடமாற்றம் செய்வது உள்ளிட்டவைகளுக்கு வருகிற 25-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.இதில் விண்ணப்பிக்க விரும்புவோர், தொழிற்பயிற்சி நிலையங்கள் இல்லாத பஞ்சாயத்து யூனியன்களில் குறைந்தபட்சம் 4 தொழிற்பிரிவுகளுடன் புதிய தொழிற்பயிற்சி நிலையம் தொடங்க விண்ணப்பிக்கலாம். நான்கு தொழிற்பிரிவுகளுக்கும் குறைவாக நடைபெற்று கொண்டிருக்கும் தொழிற்பயிற்சி நிலையங்கள் புதிய தொழிற்பிரிவுகள் தொடங்கிடவும் மற்றும் கூடுதல் அலகுகள் தொடங்கிடவும் விண்ணப்பிக்கலாம்.
தொழிற்பயிற்சி நிலையங்கள் இடமாற்றம் செய்யவும் விண்ணப்பிக்கலாம். மேலும், இதுதொடர்பான தகவல் மற்றும் அறிவுரைகள் www.nimionlineadmissio.in/iti என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.