அரசு அலுவலர்களுக்கு திறனறி தேர்வு


அரசு அலுவலர்களுக்கு திறனறி தேர்வு
x
தினத்தந்தி 6 Aug 2023 2:30 AM IST (Updated: 6 Aug 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

கோட்டூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அரசு அலுவலர்களுக்கு திறனறி தேர்வு நடைபெற்றது.

தேனி

அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்களின் பதவி உயர்வுக்கு வழிவகுக்கும் வகையில், தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் திறனறி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு 2 முறை இந்த தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, 'கம்ப்யூட்டர் ஆன் ஆபிஸ் ஆட்டோமேஷன்' என்ற திறனறி தேர்வு தேனி அருகே கோட்டூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று தொடங்கியது. இந்த தேர்வு தொடர்ந்து 3 நாட்கள் நடக்கிறது. இதில் 202 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.


Next Story