கிடப்பில் போடப்பட்ட ஆழ்குழாய் அமைக்கும் பணி


கிடப்பில் போடப்பட்ட ஆழ்குழாய் அமைக்கும் பணி
x
தினத்தந்தி 7 May 2023 6:45 PM GMT (Updated: 7 May 2023 6:45 PM GMT)

ஆழ்குழாய் அமைக்கும் பணிகிடப்பில் போடப்பட்டது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை யூனியன் கருமொழி, ஆட்டூர், கோவணி, வீராப்புலி, மருச்சுக் கட்டி, கருமொழி சானாண் வயல், ஒத்த குடியிருப்பு காமராஜர் புரம், உள்ளிட்ட கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமங்களுக்கு கருமொழியில் செயல்பட்டு வரும் தொண்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தினமும் ஒரு லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே வழங்கப்படுவதால் முழுமையாக குடிநீர் வினியோகம் நடைபெறுவதில்லை என கூறப்படுகிறது. இதனால் கருமொழி ஊராட்சிக்கு புதிய ஆழ்குழாய் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இது குறித்து ஊராட்சி தலைவர் முத்துராமலிங்கம் கூறியதாவது:- ஊராட்சியில் உள்ள கிராமங்களுக்கு சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய ஊராட்சி பொது நிதி மற்றும் ஊராட்சி கணக்கு எண் இரண்டிலிருந்து புதிதாக ஆழ்குழாய் அமைக்க ஊராட்சியில் போதுமான பணம் இருப்பு உள்ளது. ரூ.21.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்குழாய் அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய ஆழ்குழாய் அமைக்க அனுமதி வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் அதற்கான உத்தரவை உடனடியாக வழங்கினால் விரைவில் புதிய ஆழ்குழாய் அமைத்து ஊராட்சி கிராமங்களுக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகம் வழங்கப்படும் என்றார்.


Next Story