அரியலூர் மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டம்


அரியலூர் மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டம்
x

அரியலூர் மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் காடுவெட்டி ரவி தலைமையில் ஜெயங்கொண்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழைக் காக்க வேண்டிய அனைத்து பகுதிகளிலும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். கட்சியில் அனைத்து பகுதிகளிலும் புதிதாக கிளை அமைக்க வேண்டும். 2024-ல் 10 எம்.பி.க்களும், 2026-ல் சட்டமன்ற தேர்தலில் 60 எம்.எல்.ஏ.க்கள் கொண்டுவர வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு அனைத்து பகுதிகளிலும், அனைத்து மதத்தினரையும் ஒருங்கிணைத்து சிறப்பாக கட்சியை வளர்க்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இதில் மாற்று கட்சிகளில் இருந்து 5 பேர் கட்சியில் இணைந்தனர்.

கூட்டத்தில் மாநில வன்னியர் சங்க செயலாளர் டி.எம்.டி. திருமாவளவன் பேசும்போது கூறியதாவது:- குழுமூர் அனிதா மணிரத்தினம் என்பவர் பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைவரை பற்றி அவதூறாக பதிவு செய்துள்ளார். அதற்கு எவ்வளவு பேர் கொதித்தெழுந்தீர்கள். அதற்கு என்ன மாதிரியான போராட்டங்கள் நடத்தினார்கள் என தெரியவில்லை. அதேபோல் மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு அனிதா பெயரை சூட்டியுள்ளார்கள். அதனை கண்டித்து ஒரு நோட்டீசோ அல்லது போராட்டமோ நடத்தி இருந்தால் இந்த மாதிரியான பதிவுகள் தற்போது வந்திருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட தலைவர் சின்னதுரை, ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், ராமநாதன், தங்கராசு, கலியபெருமாள், சத்யராஜ், செல்வகுமார், ரஞ்சித்குமார் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக ஜெயங்கொண்டம் நகர செயலாளர் பரசுராமன் வரவேற்றார். முடிவில் நகர தலைவர் ரெங்கநாதன் நன்றி கூறினார்.


Next Story