பெண்ணை தாக்கிய கணவர் கைது

தர்மபுரி
தர்மபுரி:
அரூரை அடுத்த கீழானூர் கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி. இவருடைய 2-வது மனைவி செல்வராணி (வயது 32). செல்வராணி போச்சம்பள்ளியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது அவருடைய 2 குழந்தைகள் சாப்பிடாமல் இருந்துள்ளனர். குழந்தைகளை ஏன்? சாப்பிட வைக்கவில்லை என்று குப்புசாமியிடம், செல்வராணி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த குப்புசாமி, செல்வராணியை தாக்கி உள்ளார். அப்போது குப்புசாமி முதல் மனைவியின் மகன் கண்ணனும், செல்வராணியிடம் வாக்குவாதம் செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த செல்வராணி அரூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குப்புசாமி, கண்ணன் ஆகியோரை கைது செய்தனர்.
Next Story