மாடு கட்டுவதில் தகராறு; வியாபாரியை அரிவாளால் வெட்டியவர் கைது

கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை தாலுகா அரசகுப்பம் அருகே உள்ள கலகோபசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் பசுவராஜ் (வயது 66). வெங்காய வியாபாரி. மேலும் மாடுகளையும் வளர்த்து வருகிறார். இந்த மாடுகளை அவர் வீட்டின் அருகே கட்டி வைப்பது வழக்கம். இதனால் பசுவராஜிக்கும், அவருடைய சித்தப்பா மகன் அப்போஜி (50) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாடுகளை கட்டி வைப்பது தொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அப்போஜி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால், பசுவராஜை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர், தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்போஜியை கைது செய்தனர்.
Next Story