சூதாடிய 5 பேர் கைது


சூதாடிய 5 பேர் கைது
x

சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

ஓமலூர்:

ஓமலூரை அடுத்த கணவாய்புதூர் ஊராட்சி லோக்கூர் ெரயில் நிலையம் அருகில் பணம் வைத்து சூதாடுவதாக தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய கணவாய்புதூர் பகுதியை சேர்ந்த தென்னரசு (வயது 28), அண்ணாதுரை (53), பழனி (60), மாதேஸ்வரன் (67) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3,320-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story