போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு


போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு
x

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத திருச்சி உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து பாபநாசம் ேகார்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர்

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத திருச்சி உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து பாபநாசம் ேகார்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தகராறு வழக்கு

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா அம்மாப்பேட்டை பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த தகராறு தொடர்பான வழக்கு விசாரணை பாபநாசம் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கை அப்ே்பாது அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராஜா பதிவு செய்து இருந்தார். இந்த வழக்கில் கடந்த 2013-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு தற்போது விசாரணையில் உள்ளது.

பிடிவாரண்டு

இதில் வழக்குப்பதிவு செய்தமைக்காக வழக்கின் விசாரணைக்கு சாட்சி சொல்ல ஆஜராகும்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாவுக்கு பாபநாசம் கோர்ட்டு சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து விசாரணைக்கு ஆஜராகாத ராஜாவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து பாபநாசத்தில் உள்ள மாவட்ட உரிமைகள் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் அப்துல் கனி ராஜா உத்தரவிட்டார்.

அம்மாப்பேட்டையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ராஜா, தற்போது திருச்சி உறையூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story