தேனி பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

தேனி பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தேனி
தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் சிங்கராஜன் (வயது 31). இவர் தேனி கர்னல் ஜான் பென்னிகுயிக் பஸ் நிலையத்தில் பஸ் டிக்கெட் முன்பதிவு மையம் நடத்தி வருகிறார். நேற்று காலை இவர் தனது மோட்டார் சைக்கிளில் முன்பதிவு மையத்துக்கு வந்தார். அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மையத்துக்குள் சென்றார். அப்போது ஒரு வாலிபர் அந்த மோட்டார் சைக்கிளை திருடிக்கொண்டு தப்பி சென்றார்.
இதைப்பார்த்த சிங்கராஜன் தனது நண்பர்கள் உதவியுடன் அந்த வாலிபரை துரத்தி பிடித்தார். பின்னர் அவரை தேனி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர் சிவகாசி கோபுரம் காலனியை சேர்ந்த ரவி மகன் முத்துசெல்வம் (31) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து சிங்கராஜன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துசெல்வத்தை கைது செய்தனர்.
Related Tags :
Next Story