அதிகாரியை மிரட்டிய 8 பேர் கைது

கிருஷ்ணகிரியில் கால்வாய் பணியை வேறு பாதையில் அமைக்க கூறி அதிகாரியை மிரட்டிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி
குருபரப்பள்ளி
கிருஷ்ணகிரியில் பொதுப்பணித்துறையில் நீர்வள ஆதார பிரிவு உதவி பொறியாளராக பணிபுரிந்து வருபவர் கார்த்திகேயன் (வயது 37). இவர் நேற்று முன்தினம் குருபரப்பள்ளி அருகே ஜிஞ்சுப்பள்ளி பகுதியில் எண்ணேகொள் இடதுபுற கால்வாய் திட்ட பணிகளை கவனித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர், அதிகாரியிடம் கால்வாய் அமைக்கும் பணியை வேறு பாதையில் மேற்கொள்ள கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து கார்த்திகேயன் குருபரப்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வேப்பனப்பள்ளியை சேர்ந்த ஸ்டாலின்பாபு (48), குட்டூர் பச்சையப்பன் (65), போடரப்பள்ளி சுந்தரமூர்த்தி (47), மணியாண்டபள்ளி சந்தோஷ்குமார் (36), தவளாப்பள்ளி சிவக்குமார் (42), ஏகாம்பரம் (60), வசந்தபள்ளி மகேந்திரன் (42), சோமநாதபுரம் அசேன்கான் (48) ஆகிய 8 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story