பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கியவர் கைது

பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்
தஞ்சாவூர்
கபிஸ்தலம் அருகே உள்ள கணபதிஅக்ரஹாரம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக பணியாற்றுபவர் வீரமாங்குடியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 50). இவரிடம் சம்பவத்தன்று இலுப்பக்கோரையை சேர்ந்த ஜோதி மகன் கபிலன் (25) என்பவர் பாட்டிலில் பெட்ரோல் கேட்டுள்ளார். அதற்கு கிருஷ்ணமூர்த்தி மறுக்கவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த கபிலன் அருகில் கிடந்த இரும்பு கம்பியால் கிருஷ்ணமூர்த்தியை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில், கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கபிலனை கைது ெசய்தனர்.
Related Tags :
Next Story