அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை மைய திறப்பு விழா


அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை மைய திறப்பு விழா
x

திருவண்ணாமலை அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை மைய திறப்பு விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை மைய திறப்பு விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று நிறுவனர் தின விழா மற்றும் இருதய அறுவை சிகிச்சை மையம் திறப்பு விழா நடைபெற்றது. அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிறுவனரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலு தலைமை தாங்கினார். மருத்துவக்கல்லூரி தலைவர் சங்கரிவேலு, துணைத்தலைவர் எ.வ.குமரன், இயக்குனர் டாக்டர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வாழ்த்தி பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக சிறுநீரகவியல் துறை முதன்மை டாக்டர் சி.எம்.தியாகராஜன் கலந்து கொண்டு இருதய அறுவை சிகிச்சை மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து மருத்துவமனையில் நிறுவனர் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற ரத்த தான முகாமை சிறப்பு அழைப்பாளர் சென்னை டாக்டர் ரெலா இன்ஸ்டிடியூட் அண்டு மெடிக்கல் சென்டர் தலைவரும், நிர்வாக இயக்குனருமான டாக்டர் முகமதுரெலா ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். முகாமில் 60 பேர் ரத்த தானம் வழங்கினர். பின்னர் கல்லூரி வளாகத்தில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

தொடர்ந்து கல்லூரியின் கூட்ட அரங்கில் நடந்த நிறுவன தின விழாவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. டாக்டர் சி.எம்.தியாகராஜன், டாக்டர் முகமதுரெலா ஆகியோர் பேசினர்.

தொடர்ந்து கல்லீரல் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கலெக்டர் முருகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, அம்பேத்குமார், அருணை மருத்துவக்கல்லூரி டீன் டி.குணசிங், மருத்துவ கண்காணிப்பாளர் பி.குப்புராஜ், மனிதவள மேம்பாட்டு அலுவலர் ஷேசாத்திரி, அருணை கன்ஸ்ட்ரக்ஷன் துரை வெங்கட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story