கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில்பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி:நாளை தொடங்குகிறது


கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில்பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி:நாளை தொடங்குகிறது
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி நாளை தொடங்குகிறது.

தேனி

தேனி தாலுகா அலுவலகம் எதிரே கனரா வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் உள்ளது. இங்கு பெண்களுக்கு 30 நாட்கள் இலவச தையல் பயிற்சி நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. 18 வயது நிரம்பிய வேலையில்லா கிராமப்புற பெண்கள் இந்த பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் போது உணவு இலவசமாக வழங்கப்படும்.

தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ் மற்றும் தொழில் தொடங்க வங்கிக்கடன் ஆலோசனை வழங்கப்படும். பயிற்சி பெற விரும்புபவர்கள் தங்களின் புகைப்படம், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை நாளை மறுநாளுக்குள் பயிற்சி நிலையத்தில் நேரில் சமர்ப்பித்து முன்பதிவு செய்ய வேண்டும். இத்தகவலை தேனி கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலைய இயக்குனர் தனசேகரப்பெருமாள் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story