ராணிமகாராஜபுரத்தில் தீத்தடுப்பு, உயிர்மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி


ராணிமகாராஜபுரத்தில்  தீத்தடுப்பு, உயிர்மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி
x
தினத்தந்தி 18 Nov 2022 12:15 AM IST (Updated: 18 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராணிமகாராஜபுரத்தில் தீத்தடுப்பு, உயிர்மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

ராணிமகாராஜபுரத்தில் உள்ள தனியார் அப்பள கம்பெனியில் தீத்தடுப்பு மற்றும் உயிர் மீட்பு பற்றி ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் திருச்செந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜமூர்த்தி தீவிபத்து மற்றும் பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து விளக்கி பேசினார். மேலும், தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) மோகன் தலைமையில் வீரர்கள் ராதாகிருஷ்ணன் பாலகிருஷ்ணன், ரமேஷ், சேகர், விமல் இமானுவேல் ஆபிரகாம், முத்து மணிகண்டன், அகஸ்டின் உள்ளிட்ட வீரர்கள் செயல்முறை பயிற்சி செய்து காண்பித்தனர். அப்பள கம்பெனி மேலாளர் மோகன் நன்றி கூறினார்.


Next Story