சுயம்பு சனீஸ்வர பகவான் கோவிலில் கருப்பண்ணசாமிக்கு மதுபான படையல்:நாளை மறுநாள் நடைபெறுகிறது

சின்னமனூர் அருகே குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சோனை முத்து கருப்பண்ணசாமிக்கு நாளை மறுநாள் மதுபான படையல் நடைபெறுகிறது
தேனி
சின்னமனூர் அருகே குச்சனூரில் சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆடி மாத சனிக்கிழமைகளில் திருவிழா நடைபெறும். அதன்படி இன்று ஆடி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் சுரபி நதியில் புனித நீராடி தீபம் ஏற்றி வழிபட்டனர். இந்நிலையில் முக்கிய நிகழ்வான சனீஸ்வர பகவான் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள காவல் தெய்வமான சோனை முத்து கருப்பண்ணசாமிக்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மதுபான படையல் நடைபெறும். இதில் பக்தர்களால் வழங்கப்படும் ஆயிரக்கணக்கான மது பாட்டில்களை படையலிட்டு வழிபாடு நடைபெறும்.
Related Tags :
Next Story