திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு


திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சமத்துவநாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி, உறுதிமொழியினை வாசித்தார். இதை தொடர்ந்து பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், அலுவலர்கள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். இதில் பேராசிரியர்கள் பசுங்கிளிபாண்டியன், சிவமுருகன், சிவ இளங்கோ, அபுல்கலாம் ஆசாத், மருதையாபாண்டியன், கவிதா, அலுவலக கண்காணிப்பாளர் பெ.இன்பதுரை பங்கேற்றனர்.


Next Story