ெரயில் நிலையத்தில் ஏ.டி.எம். மையம் அமைக்கப்படுமா?

அதிராம்பட்டினம் ரெயில் நிலையத்தில் ஏ.டி.எம். மையம் அமைக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
அதிராம்பட்டினம்:
அதிராம்பட்டினம் ரெயில் நிலையத்தில் ஏ.டி.எம். மையம் அமைக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
ரெயில் நிலையம்
அதிராம்பட்டினம் ெரயில் நிலையம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது. இந்த ரெயில் நிலையம் வழியாக காரைக்குடி, திருவாரூர், எர்ணாகுளம், வேளாங்கண்ணி, தாம்பரம், ஆகிய பகுதிகளுக்கு ெரயில்கள் சென்று வருகின்றன.
இந்த ெரயில் நிலையத்துக்கு நாள்தோறும் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த ரெயில் நிலையத்தில் ஏ.டி.எம்.மையம் இல்லை. இதனால் பயணிகளுக்கு அவசர ேதவைக்காக பணம் எடுக்க முடியாத நிலை உள்ளது.
பயணிகள் அவதி
பெரும்பாலான பயணிகள் இருந்த இடத்தில் இருந்தே ஆண்ட்ராய்டு செல்போனை பயன்படுத்தி ஆன்லைன் முறையில் ெரயில் பயணச்சீட்டு எடுத்து வருகின்றனர். பலர் ரெயில் நிலையத்துக்கு சென்று பணம் கொடுத்து பயணச்சீட்டு வாங்குகின்றனர். இதனால் பயணிகள் அனைவருமே வரிசையில் நின்று நேரடியாக பணம் கொடுத்துதான் பயணச்சீட்டு எடுத்துச்செல்கின்றனர்.
ரெயில் நிலையத்தில் ஏ.டி.எம். மையம் இருந்தால் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும். பணம் எடுக்க ரெயில் நிலையத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் உள்ள பஸ் நிலையம் அல்லது கடற்கரை சாலையில் உள்ள ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று பணம் எடுத்து வருகின்றனர்.
ஏ.டி.எம். மையம் அமைக்க வேண்டும்
வெளியூர்களில் இருந்து அதிராம்பட்டினம் வரும் பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைகின்றனர். எனவே அதிராம்பட்டினம் ெரயில் நிலையத்தில் ஏ.டி.எம். மையம் அமைக்க சம்பந்தப்பட்ட ரெயில்வே அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.