அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் ஆடி தபசு விழா


அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் ஆடி தபசு விழா
x
திருப்பூர்


அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதான வரலாற்று சிறப்புவாய்ந்த கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி தபசு விழா நடைபெறும். அதன்படி நேற்று கோவிலில் ஆடி தபசு விழா நடந்தது. கருணாம்பிகை அம்மன் அவினாசிலிங்கேசுவரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story