மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா


மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
x

கடையநல்லூரில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் இக்பால் நகரில் சிராஜூல் மில்லத் அறக்கட்டளை சார்பில் 10, 12-ம் வகுப்பு தேர்வில் கடையநல்லூர் நகரத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சிராஜூல் மில்லத் விருது மற்றும் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. ஜபருல்லாஹ்கான் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர்கள் செய்யது முகைதீன், அப்துல் கனி, சிக்கந்தர் சாகிப், ஹூசைன், முஸ்லிம் லீக் முன்னாள் மாவட்ட தலைவர் இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை தலைவர் காஜா மைதீன் வரவேற்றார்.

கடையநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ், டாக்டர் சஞ்சிவீ, வரலாற்று எழுத்தாளர் இப்ராகீம் மடத்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செய்யது இப்ராகீம் 33-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் செய்யது அலி பாத்திமா ஆகியோர் கலந்து கொண்டு, மாணவ- மாணவிகளுக்கு பரிசு, விருதுகளை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் முகம்மது கோயா, இஸ்மத், அப்துல் லத்தீப், யூசுப், ரஹமத்துல்லாஹ், சேகு உதுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், யாகூப் நன்றி கூறினார்.


Next Story