மூதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு

மூதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு
x

மூதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ராணிப்பேட்டை

மூதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அரக்கோணத்தை அடுத்த கோணலம் கிராமத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்ட பயனாளிகளுக்கு பட்டா வழங்க உள்ள இடத்தினை அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா, தாசில்தார் சண்முகசுந்தரம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் போது வருவாய் ஆய்வாளர் ஜெயபால், கிராம நிர்வாக அலுவலர் அஸ்வினி மற்றும் பலர் உடனிருந்தனர்.

அதைத்தொடர்ந்து மூதூர் கிராமத்திற்கு சென்ற உதவி கலெக்டர் பாத்திமா, தாசில்தார் சண்முகசுந்தரம் ஆகியோர் அங்குள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு போதைப்பொருள் பழக்கத்தினால் ஏற்படுகின்ற பாதிப்புகள், அதனை தடுக்கும் வழிமுறைகள், குழந்தைகள் திருமணம் மற்றும் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Next Story