தென்னையில் பூச்சி நோய் மேலாண்மை விழிப்புணர்வு முகாம்

ஆலங்குளம் அருகே தென்னையில் பூச்சி நோய் மேலாண்மை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் வட்டாரம் வேளாண்மை-உழவர் நலத்துறை மூலம் தென்னையில் பூச்சி நோய் மேலாண்மை முனைப்பு இயக்க விழிப்புணர்வு முகாம் குத்தபாஞ்சான் ஊராட்சி ஆழ்வான் துலுக்கப்பட்டி கிராமத்தில் ஆலங்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுரைப்படி நடத்தப்பட்டது. உதவி வேளாண்மை அலுவலர் புஷ்பமாரி வரவேற்று பேசினார். துணை வேளாண்மை அலுவலர் முருகன், துறையின் மூலம் வழங்கப்படும் பண்ணை கருவிகள் தொகுப்பு, மின்கலம் மூலம் இயங்கும் தெளிப்பான் போன்ற மானிய திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார்.
வேளாண்மை அலுவலர் சண்முகப்பிரியா தென்னையை தாக்கும் நோய் மற்றும் பூச்சிகள் குறித்தும், அவற்றின் மேலாண்மை குறித்தும் எடுத்துரைத்தார். முகாமில் விவசாயிகளுக்கு தென்னையை தாக்கும் நோய் மற்றும் பூச்சி மேலாண்மை குறித்து துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில் உதவி வேளாண்மை அலுவலர் செந்தில்குமார், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஸ்டேன்லி மற்றும் ஆழ்வான் துலுக்கப்பட்டி விவசாயிகள் கலந்து கொண்டனர்.