தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம்


தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம்
x
தினத்தந்தி 20 April 2023 12:15 AM IST (Updated: 20 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

ராமநாதபுரம்

திருவாடானை,

திருவாடானை தீயணைப்பு நிலையம் சார்பில் நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதனையொட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் திருவாடானை, சி.கே.மங்களம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று தீ விபத்து குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டனர்.

அப்போது தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுக்கு தீ விபத்து குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர்.


Next Story