செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஊா்வலம்
செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஊா்வலம் நடைபெற்றது.
புதுக்கோட்டை
ஆலங்குடி:
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்கி, அடுத்தமாதம் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி ஆலங்குடி பேரூராட்சியில் 'நம்ம செஸ் நம்ம பெருமை' ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊா்வலத்தை ஆலங்குடி பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்த ஊா்வலம் ஆலங்குடி, அரசமரம், காமராஜர் சிலை, பள்ளிவாசல் தெரு, சந்ைதப்பேட்டை வழியாக வடகாடு முக்கம் பேரூராட்சியை வந்தடைந்தது. இதையடுத்து, வட்டங்கச்சேரி திடலில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் கோலப்போட்டியை ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை மதிப்பீடு செய்து பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் பூவேந்திரன், துணைத்தலைவர் ராஜேஸ்வரி பழனிக்குமார் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story