அடிப்படை வசதி செய்ய வேண்டும்


அடிப்படை வசதி செய்ய வேண்டும்
x

அடிப்படை வசதி செய்ய வேண்டும்

திருப்பூர்

வீரபாண்டி

திருப்பூர் வீரபாண்டி 52-வது வார்டு பலவஞ்சிபாளையம் சாலையில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ரம்ப சுகாதார நிலையத்திற்கு ஜே.ஜே.நகர், லட்சுமி நகர், வீரபாண்டி, பலவஞ்சிபாளையம் போன்ற பகுதிகளிலிருந்து ஏராளமான கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் பலரும் வந்து ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவசர முதலுதவி சிகிச்சைகள், பிரசவகால சேவகைகள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசிகள், சாதாரண நோய்களுக்கான ஆலோசனைகள் வழங்குவது, போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் ஏராளமான கர்ப்பிணி பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகின்றனர். ஆனால் போதிய இடவசதி மற்றும் அடிப்படை வசதி இல்லாததால் கர்ப்பிணிகள் பலரும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வெளியே வெயிலில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளது. எனவே சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணிகளுக்கு அமர்வதற்கான நாற்காலி மற்றும் குடிநீர் போன்றவற்றை மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து தர வேண்டும் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

-----------


Next Story