வரத்து குறைவால் வெற்றிலை விலை உயர்வு
வரத்து குறைவால் வெற்றிலை விலை உயர்ந்துள்ளது.
கரூர்
நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம், நஞ்சை புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் வெற்றிலை பயிர் செய்துள்ளனர். வெற்றிலை விளைந்தவுடன் பறித்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று 104 கவுளி கொண்ட இளங்கால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை ரூ.8,500-க்கும், 104 கவுளி கொண்ட இளங்கால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ.3,500-க்கும் விற்பனையானது. 104 கவுளி கொண்ட முதிகால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை ரூ.4 ஆயிரத்துக்கும் , முதிகால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ.1,100-க்கும் விற்பனையானது. வரத்துகுறைவால் வெற்றிலை விலை உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story