தூத்துக்குடி, கோவை இடையே இரவுநேர ரெயில்இயக்க வேண்டும்: தூத்துக்குடி இந்தியவர்த்தகதொழிற்சங்கம்


தினத்தந்தி 10 Nov 2022 12:15 AM IST (Updated: 10 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி, கோவை இடையே இரவுநேர ரெயில்இயக்க வேண்டும் என்று தென்னக ரெயில்வே பொதுமேலாளரிடம் தூத்துக்குடி இந்தியவர்த்தக தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி-கோவை இடையே இரவு நேர ரெயில் இயக்க வேண்டும் என்று தெற்கு ரெயில்வே பொதுமேலாளரிடம் தூத்துக்குடி வர்த்தக தொழிற்சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்து உள்ளனர்.

கோரிக்கை மனு

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆலோசனையின் பேரில் தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் (பொறுப்பு) பி.ஜி.மல்லையாவை தூத்துக்குடி இந்திய வர்த்தக தொழிற்சங்க செயலாளர் கோடீசுவரன், தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலாளர் பிரமநாயகம், நிர்வாக செயலாளர் ஜே.ஏ.என்.ஆனந்தன், துணைத்தலைவர் எஸ்.அந்தோணிமுத்துராஜா ஆகியோர் சென்னை ரெயில்வே அலுவலகத்தில் நேரில் சந்தித்து பேசினர். தொடர்ந்து ஒரு கோரிக்கை மனுகொடுத்தனர்.

கோவை ரெயில்

அந்த மனுவில், தூத்துக்குடி-கோவை இரவு நேர நேரடி ரெயில் இயக்க வேண்டும், தூத்துக்குடி துறைமுகம், கொச்சி துறைமுகம் இணைக்கும் வகையில் நெல்லை-பாலக்காடு-நெல்லை இடையேயான பாலக்காடு விரைவு ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். மதுரை-லோக்மான்யா திலக் ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும், மதுரை-புனலூர் விரைவு ரெயில் கோவில்பட்டி, கடம்பூர் ரெயில் நிலையங்களிலும், கொல்லம்-சென்னை அனந்தபுரி விரைவு ரெயில் வாஞ்சிமணியாச்சி, கடம்பூர் ரெயில் நிலையங்களிலும் நின்று செல்ல வேண்டும். தூத்துக்குடி ரெயில் நிலையம் செல்லும் சாலை குறுகலாக இருப்பதால், கூடுதல் சாலை ரெயில் நிலைய இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி உள்ளனர்.


Next Story