கோவிந்தாங்கல் தொடக்கப் பள்ளியில் சாலை, கழிவறைபணிகளுக்கு பூமி பூஜை
கோவிந்தாங்கல் தொடக்கப் பள்ளியில் சாலை, கழிவறை பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது.
சோளிங்கர்
கோவிந்தாங்கல் தொடக்கப் பள்ளியில் சாலை, கழிவறை பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது.
சோளிங்கரை அடுத்த கோவிந்தாங்கல் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு துணை த்தலைவர் நாகராஜ் நிதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.11.82 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை மற்றும் 2 கழிவறைகள் கட்டப்பட உள்ளன. இதற்கான பணிகள் தொடங்க பூமி பூஜை நடந்தது.நிகழ்ச்சிக்கு சோளிங்கர் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதி சக்கரவர்த்தி, ஒன்றிய செயலாளர் பழனி, துணைச் செயலாளர் குமுதா தண்டபாணி, சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய துணைத் தலைவர் பூங்கொடி ஆனந்தன், தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் பூர்ணசந்தர் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தனர்.
அப்போது தலைமை ஆசிரியர் சக்கரவர்த்தி, ஆசிரியர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். நிகழ்ச்சி முடிவில் சண்முகம் நன்றி கூறினார்.