குடிநீர் தொட்டி அமைக்க பூமிபூஜை
சின்னமல்லிப்பட்டி கிராமத்தில் குடிநீர் தொட்டி அமைக்க பூமி பூஜை நடந்தது.
தர்மபுரி
தர்மபுரி ஒன்றியம் நாயக்கனஅள்ளி ஊராட்சி சின்னமல்லிப்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.4 லட்சத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்படுகிறது. இந்த பணிக்கான பூமி பூஜையை கோவிந்தசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தர்மபுரி ஒன்றியகுழு தலைவர் நீலாபுரம்செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கீதாலட்சுமி, ஒன்றிய உதவி பொறியாளர் துரைசாமி, மாவட்ட பிரதிநிதி அண்ணாதுரை, கிளை செயலாளர் செல்வகுமார், நிர்வாகி கோவிந்தராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story