விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி

ஓசூர் அரசு பள்ளிகளில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஓசூர்:
ஓசூர் முல்லைநகர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, சீதாராம்நகரில் உள்ள அரசு உருது மேல்நிலைப்பள்ளி மற்றும் புனித ஜான் போஸ்கோ அரசு நிதி உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கலந்து கொண்டு 536 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்கள்.
இதில், துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ், தலைமை ஆசிரியர்கள் அலெக்சாண்டர், தேவசேனா, புனித ஜான் போஸ்கோ பள்ளி தாளாளர் ஆஞ்சலா, பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர்கள் மகேஷ்பாபு, அப்துல் முஜீப், முன்னாள் தலைவர் ஒய்.வி.எஸ்.ரெட்டி, ஆசிரிய, ஆசிரியைகள், மாநகராட்சி கவுன்சிலர்கள், பகுதி செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.