பார்வையற்ற பயிற்சி உதவி கலெக்டர் பொறுப்பேற்பு


பார்வையற்ற பயிற்சி உதவி கலெக்டர் பொறுப்பேற்பு
x

நெல்லையில் பார்வையற்ற பயிற்சி உதவி கலெக்டர் பொறுப்பேற்று கொண்டார்.

திருநெல்வேலி

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உதவி பயிற்சி கலெக்டராக ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்ற கோகுல் நேற்று கலெக்டர் விஷ்ணு முன்னிலையில் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அவருக்கு கலெக்டர் விஷ்ணு வாழ்த்துக்கள் தெரிவித்து புத்தகத்தை பரிசாக வழங்கினார்.

கோகுல் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர். இவர் கண்பார்வையற்றவர். முதுகலை படிப்பில் எம்.ஏ. ஆங்கிலம் முடித்துள்ளார். 2021-ம் ஆண்டு அகில இந்திய குடிமை பணி (ஐ.ஏ.எஸ். தேர்வில்) தேர்வில் தேர்ச்சி பெற்று நெல்லை மாவட்டத்தில் உதவி பயிற்சி கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.


Next Story