மயிலாடுதுறை அருகே தூக்கில் தொழிலாளி பிணம்

மயிலாடுதுறை அருகே கேரளாவை சேர்ந்த பட்டறை தொழிலாளி ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார்.
கொள்ளிடம்:
மயிலாடுதுறை அருகே கேரளாவை சேர்ந்த பட்டறை தொழிலாளி ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார்.
தூக்கில் பிணம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆயங்குடி பள்ளம் கிராமத்தில் ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் எதிரில் ஒரு பெட்டிக்கடை வாசலின் முன்புற பகுதியில் நேற்று காலை ஒருவர் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதை அறிந்த கொள்ளிடம் போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
முன்னதாக அவருடைய சட்டைப்பையை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்சு மற்றும் ஏ.டி.எம்.கார்டு உள்ளிட்டவை இருந்தன.
பட்டறை தொழிலாளி
சட்டைப்பையில் இருந்த அடையாள அட்டைகளில் இறந்தவரின் படம் இருந்தது. அதை வைத்து இறந்து கிடந்தவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வட்டியூர் பகுதியை சேர்ந்த ஹேமச்சந்திரன்(வயது 52) என்பதும், வெளிநாட்டில் பட்டறை தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. இவர் இங்கு ஏன் வந்தார்? எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.