நாளை முதல் 22-ந் தேதி வரை புத்தக கண்காட்சி


நாளை முதல் 22-ந் தேதி வரை புத்தக கண்காட்சி
x

வாலாஜாவில் நாளை முதல் 22-ந் தேதி வரை புத்தக கண்காட்சி நடக்கிறது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 22-ந் தேதி (சனிக்கிழமை) வரை காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.

இந்த புத்தகக் கண்காட்சியை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைக்கிறார். இந்த கண்காட்சியில் 50-க்கும் மேற்பட்ட சிறப்பு நூல் அரங்கங்கள், மிகச் சிறந்த அரியவகை நூல் தொகுப்புகள், ரூ.10 முதல் ரூ.1000 வரை அனைத்து நூல்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி, நூல்கள் வாங்குபவர்களுக்கு தினமும் குலுக்கல் முறையில் பரிசுகள், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் கலை, இலக்கியம், வரலாறு, சரித்திரம், நவீன இலக்கியம், தன்னம்பிக்கை, மருத்துவம், சுய முன்னேற்ற நூல்கள், புகழ்பெற்ற பேச்சாளர்களின் சிறப்புரை, தலைசிறந்த தலைவர்களின் நூல்கள், அரசு மற்றும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டி நூல்கள் அனைத்தும் ஒரே கூரையின் கீழ் குவிக்கப்பட்டுள்ளன.

அனைத்து நாட்களிலும் மாலை 5 மணி அளவில் தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், மகளிர் சிறப்பு நிகழ்ச்சிகள், புகழ்பெற்ற பேச்சாளர்களின் நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், நூல் வெளியீட்டு விழாக்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள், சிறப்பு விருந்தினர்களின் கருத்தரங்குகள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளின் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி மற்றும் கதை சொல்லும் போட்டிகள், போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு இது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அனைவரும் குழந்தைகளுடன் வந்து பயன்பெறலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்தார்.


Next Story