அரிய வகை முகசிதைவு நோயால் அவதிப்படும் சிறுவன்


அரிய வகை முகசிதைவு நோயால் அவதிப்படும் சிறுவன்
x

மன்னார்குடி அருகே அரிய வகை முகசிதைவு நோயால் அவதிப்படும் சிறுவனின் சிகிச்சைக்கு அரசு உதவ வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

மன்னார்குடி;

மன்னார்குடி அருகே அரிய வகை முகசிதைவு நோயால் அவதிப்படும் சிறுவனின் சிகிச்சைக்கு அரசு உதவ வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக சிதைவு நோய்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பரவாக்கோட்டை தோப்பு தெரு பகுதியை சேர்ந்தவர் சங்கர். கூலித்தொழிலாளி. இவருக்கு 2 மகள் மற்றும் சக்திவேல் (வயது 5) என்ற மகனும் உள்ளனர். சிறுவன் சக்திவேல் பிறக்கும்போதே முக சிதைவு என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தான்.இந்த நோயின் அவதியால் சிறுவன் சக்திவேல் பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்து வருகிறான். இந்த நோய்க்கு அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிப்பதற்கு போதிய பண வசதி சங்கரிடம் இல்லை. இதனால் சிறுவனின் பெற்றோர் தினமும் தங்கள் மகனி்ன் நிலையை நினைத்து கண்ணீர் வடிக்கும் சூழல் உள்ளது.

சிகிச்சை

தினமும் கூலிவேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வரும் சங்கர் தனது ஒரே மகன் சிகிச்்சைக்காக பணம் திரட்ட முடியாத நிலையில் உள்ளாா். சிறுவன் சக்திவேல் தனக்கு இருக்கும் இந்த நோயால் தனது சக வயது சிறுவர்களோடு வெளியில் சென்று விளையாட முடியாத நிலையில் உள்ளான்.எனவே மாவட்ட நிர்வாகம் சிறுவன் சக்திவேலின் சிகிச்சைக்கு உதவ வேண்டும் என அவனது பெற்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.


Next Story