வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
x

கீழ்பென்னாத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் கண்ணகி நகரை சேர்ந்தவர் விஜயராஜ் (வயது 39). இவரது மனைவி சுதா (36). கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலையம் அருகில் தண்ணீர் கேன் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்தனர்.

நேற்று காலை வீட்டை பூட்டிக்கொண்டு கணவன் மனைவி இருவரும் கடைக்கு ெசன்றனர்.

பின்னர் மதிய உணவுக்காக வீட்டிற்கு சென்றனர். வீட்டின் முன்பக்க கதவை திறந்து கொண்டு உள்ளே சென்ற போது பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 15 பவுன் நகை, வெள்ளி நகைகள், மற்றும் ரூ.1½ லட்சம் திருட்டு ேபாய் இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர்.

திருட்டு போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.6 லட்சம் ஆகும். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப் பகலில் நடந்த இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story