பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
x

கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

அஞ்சல் துறையை தனியார் மையமாக்கு வதை கண்டித்தும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும் அகில இந்திய அஞ்சல் 3 மற்றும் 4 ம் பிரிவு தபால் காரர்கள் மற்றும் கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடத்தினார்கள்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவாக பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கத்தினர் கோவில்பட்டி தலைமை தபால் நிலைய வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆ்ர்ப்பாட்டத்திற்கு ஓய்வூதியர் சங்க துணை தலைவர் மோகன்தாஸ் தலைமை தாங்கினார். இதில் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


Next Story