கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்


கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
x

சிவகங்கை மற்றும் காளையார்கோவில் பகுதியில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை

காளையார்கோவில்,

சிவகங்கை மற்றும் காளையார்கோவில் பகுதியில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் கிராமத்தில் உள்ள அழியாதநாயகி அம்மன் கோவில் முளைப்பாரி திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் காஞ்சிரங்கால்-திருப்பத்தூர் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 32 வண்டிகள் கலந்துகொண்டன. பெரியமாட்டு வண்டி பந்தயம், நடுமாட்டு வண்டி மற்றும் சின்னமாட்டு வண்டி பந்தயம் என 3 பிரிவாக நடந்தது.

முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 8 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை சிவகங்கை ரோகித் மற்றும் பரவை சோனைமுத்து வண்டியும், 2-வது பரிசை மேலவளவு பன்னீர்செல்வம் வண்டியும், 3-வது பரிசை அவனியாபுரம் மோகன் மற்றும் திருமலை கண்ணன் வண்டியும் பெற்றது.

பரிசு

நடுமாட்டு வண்டி பந்தயத்தில் 10 வண்டிகள் கலந்துகொண்டன. அதில் முதல் பரிசை அதிகரை வேங்கை மற்றும் திருமலை கண்ணன் வண்டியும், 2-வது பரிசை பூக்கொல்லை காளிமுத்து வண்டியும், 3-வது பரிசை சொக்கம்பட்டி செந்தில் மற்றும் திருவாதவூர் தன்வந்த் வண்டியும் பெற்றது.

இறுதியாக நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 14 வண்டிகள் கலந்துகொண்டன. அதில் முதல் பரிசை பூக்கொல்லை ரித்தீஸ்வரன் வண்டியும், 2-வது பரிசை சுருளிப்பட்டி செந்தில்விஷ்வா வண்டியும், 3-வது பரிசை பூவந்தி தியானபாண்டி வண்டியும் பெற்றது.

காளையார்கோவில்

இதேபோல் காளையார்கோவில் சந்தனமுத்துமாரியம்மன் கோவில் பால்குட விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் காளையார்கோவில்-மறவமங்கலம் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 20 வண்டிகள் கலந்துகொண்டன. பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 8 வண்டிகள் கலந்துகொண்டன.

முதல் பரிசை குப்பச்சிபட்டி வைரம் மற்றும் சொக்கநாதபுரம் பாலு வண்டியும், 2-வது பரிசை ஆட்டுக்குளம் நகுல்நிலா மற்றும் உருவாட்டி மேல்வாக்கோட்டை கர்ணன் வண்டியும், 3-வது பரிசை கல்லல் உடையப்பாசக்தி வண்டியும் பெற்றது.

இறுதியாக நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 12 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை மேட்டுப்பட்டி ராஜாமணி வண்டியும், 2-வது பரிசை தேனி மாவட்டம் என்.டி.பட்டி வீரணன் வண்டியும், 3-வது பரிசை நெடோடை குணசேகர் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


Next Story