குண்டும், குழியுமான சாலை சீரமைப்பு
பாட்டவயல் அருகே குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்பட்டது.
நீலகிரி
பந்தலூர்
பந்தலூர் தாலுகா பாட்டவயல் அருகே கொட்டாடு-வட்டக்கொல்லி சாலை குண்டும், குழியுமாக காட்சியளித்தது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இதையடுத்து அந்த சாலையை சீரமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து கொட்டாடு-வட்டக்கொல்லி சாலை சீரமைக்கப்பட்டது. இந்த பணியை கூடலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மோகன்குமாரமங்கலம், வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதரன், ஒன்றிய பொறியாளர் ரமேஸ்குமார், மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். நீண்ட நாட்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story