திருச்செங்கோடு புதிய பஸ் நிலையத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு பஸ்கள் இயக்கம்

திருச்செங்கோடு புதிய பஸ் நிலையத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.
நாமக்கல்
எலச்சிபாளையம்:
திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் பிரசித்தி பெற்றதாகும். இங்கு நாமக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய தினமும் வந்து செல்கிறார்கள். பக்தர்கள் மலை மீது செல்ல வசதியாக கோவில் நிர்வாகம் சார்பில் தேர் நிறுத்தும் இடத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் திருச்செங்கோடு புதிய பஸ் நிலையத்தில் இருந்து இந்த பஸ்களை இயக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் திருச்செங்கோடு புதிய பஸ் நிலையத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பஸ்கள் இயக்கப்படும் என்று கோவில் உதவி ஆணையாளர் ரமணிகாந்தன் தெரிவித்துள்ளார்.
Next Story