திண்டுக்கல் மாவட்டத்தில் 10 புதிய வழித்தடங்களில் அரசு பஸ் சேவை; அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்


திண்டுக்கல் மாவட்டத்தில் 10 புதிய வழித்தடங்களில் அரசு பஸ் சேவை; அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்
x

திண்டுக்கல் மாவட்டத்தில் 10 புதிய வழித்தடங்களில் அரசு பஸ் சேவையை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 10 புதிய வழித்தடங்களில் அரசு பஸ் சேவையை அமைச்சர் இ.ெபரியசாமி தொடங்கி வைத்தார்.

சட்டமன்ற அலுவலகம்

திண்டுக்கல் மாவட்டத்தில் 10 புதிய வழித்தடங்களில் அரசு பஸ் சேவை தொடக்க விழா மற்றும் புதிய சட்டமன்ற அலுவலகம் திறப்பு ரெட்டியார்சத்திரத்தில் இன்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். போக்குவரத்து துறை நிர்வாக இயக்குனர் ஆறுமுகம், மேலாளர் டேனியல் சாலமன், ரெட்டியார்சத்திரம் ஒன்றியக்குழு தலைவர் சிவகுருசாமி, தி.மு.க. மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட துணைச்செயலாளர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் அமைச்சர் இ.பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, ரெட்டியார்சத்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தார். அதன்பிறகு மாவட்டத்தில் 10 புதிய வழித்தடங்களில் அரசு பஸ் சேவையையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் இ.பெரியசாமி பேசியதாவது:-

புதிய டவுன் பஸ்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் 10 புதிய வழித்தடங்களில் பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளதால், பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சியில் தான் முதன்முதலில் கிராமங்களுக்கு மின்சாரம் மற்றும் பஸ் வசதி கிடைத்தது என்பதை யாரும் மறந்துவிட முடியாது. கன்னிவாடியில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையம் விரைவில் திறக்கப்படும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிதாக 1,140 பஸ்களை வாங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து உள்ளார். அதன்பிறகு, திண்டுக்கல் மாவட்டத்துக்கு புதிய டவுன் பஸ்கள் இயக்கப்படும். கிராமப்புறங்களில் சேதமடைந்த சாலைகளை சீரமைப்பது குறித்து அந்தந்த ஊராட்சி தலைவர்கள், சட்டமன்ற அலுவலகத்தில் உள்ள தாசில்தாரிடம் எடுத்துரைக்க வேண்டும். அதன் அடிப்படையில் சாலைகள் சீரமைக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

10 புதிய வழித்தடங்கள் என்னென்ன?

* திண்டுக்கல்-ஒட்டன்சத்திரம் (வழிகள்: ரெட்டியார்சத்திரம், எல்லப்பட்டி, கட்டசின்னன்பட்டி, காமாட்சிபுரம், நரிப்பட்டி, பழக்கனூத்து, திருமலைராயபுரம், மூலச்சத்திரம்)

* திண்டுக்கல்-கன்னிவாடி (வழிகள்: அம்மாபட்டி, மேலப்பட்டி பிரிவு, நடுப்பட்டி, மாங்கரை, புதுப்பட்டி)

* திண்டுக்கல்-செட்டியப்பட்டி (வழிகள்: பேகம்பூர், தோமையார்புரம் பைபாஸ்)

* செம்பட்டி-வத்தலக்குண்டு (வழிகள்: சித்தையன்கோட்டை, சித்தரேவு, அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி)

* ஒட்டன்சத்திரம்-திண்டுக்கல் (வழிகள்: மூலச்சத்திரம், திருமலைராயபுரம், பழக்கனூத்து, நரிப்பட்டி, காமாட்சிபுரம், கட்டசின்னன்பட்டி, எல்லபட்டி, ரெட்டியார்சத்திரம்)

* வத்தலக்குண்டு-செம்பட்டி (வழிகள்: பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, சித்தையன்கோட்டை, ஆத்தூர்)

* திண்டுக்கல்-எஸ்.காமாட்சிபுரம் (வழிகள்: வாணிவிலாஸ், கொட்டப்பட்டி)

* வேடசந்தூர்-திண்டுக்கல் (வழிகள்: சீத்தமரம் நால்ரோடு, கரட்டுப்பட்டி, ரெட்டியார்சத்திரம், முத்தனம்பட்டி)

* கன்னிவாடி-திண்டுக்கல் (வழிகள்: திப்பம்பட்டி, கசவனம்பட்டி, வெல்லம்பட்டி, கோனூர், குஞ்சனம்பட்டி, புளியராஜக்காப்பட்டி, குட்டத்துப்பட்டி)

* பூத்தாம்பட்டி-திண்டுக்கல் (வழிகள்: தாடிக்கொம்பு, மாவட்ட கோர்ட்டு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம்)


Next Story