இடைத்தேர்தல் எதிரொலி: வாகன சோதனை தீவிரம்

இடைத்தேர்தல் எதிரொலி: வாகன சோதனை தீவிரம்
ஈரோடு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பிரசாரத்தின்போது வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வினியோகத்தை தடுப்பதற்காக 3 நிலை கண்காணிப்புக்குழுக்களும், 3 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா, சுவஸ்திக் கார்னர், பெருந்துறைரோடு பழையபாளையம், வீரப்பம்பாளையம், கொல்லம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டார்கள். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
Related Tags :
Next Story