கோத்தகிரி அருகே மின்சாரம் தாக்கி கன்றுக்குட்டி- வளர்ப்பு நாய் பலி


கோத்தகிரி அருகே மின்சாரம் தாக்கி கன்றுக்குட்டி- வளர்ப்பு நாய் பரிதாபமாக இறந்தது.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே உள்ள கடை கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் ஹரீஷ். விவசாயி. இவர் மேய்ச்சலில் இருந்து திரும்பிய தனது கொட்டகையில் மாடுகளை அடைத்து வைத்திருந்தார். மாலை 6 மணிக்கு கன்றுக் குட்டியின் சத்தம் கேட்டு கொட்டகைக்கு சென்று பார்த்தபோது மின்கசிவு ஏற்பட்டதன் காரணமாக ஒயர்கள் அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக் குட்டியும், காவலுக்கு இருந்த வளர்ப்பு நாயும் உயிரிழந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே இது குறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் இது குறித்து தகவலறிந்த வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் உயிரிழந்த கன்றுக்குட்டி மற்றும் வளர்ப்பு நாய் அதே பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டது.


Next Story