மஞ்சவாடி கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்

பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை கல்லூரி சார்பில் மஞ்சவாடி கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் அன்பரசி தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பேராசிரியர் ரமேஷ் வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார். இதில் நாட்டு நலப்பணி திட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் சமுதாய நலக்கூட வளாகம், மாரியம்மன் கோவில், நூலகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். மேலும் சாலையோரங்களில் கிடந்த குப்பைகளை அகற்றினர். மேலும் டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் மற்றும் கொரோனா தொற்று பாதிப்பு ஆகியவற்றை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு ஆலோசனைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து காய்ச்சல் தடுப்பு முறைகள், பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தனர். நேற்று நடந்த முகாமின் முடிவில் மாணவி பத்மாவதி நன்றி கூறினார். நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாமின் ஒரு பகுதியாக நாள்தோறும் கருத்தரங்கம் நடைபெறஉள்ளது குறிப்பிடத்தக்கது.