பெண்களுக்கு புற்றுநோய் கண்டறியும் முகாம்

வள்ளியூரில் பெண்களுக்கு புற்றுநோய் கண்டறியும் முகாம் நடந்தது
வள்ளியூர் (தெற்கு):
வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், வள்ளியூர் இன்னர்வீல் சங்கம் மற்றும் நெல்லை காவேரி மருத்துவமனை ஆகியவை இணைந்து பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் இலவச சிறப்பு முகாமை வள்ளியூர் அன்னலட்சுமி மருத்துவமனை வளாகத்தில் நடத்தியது.
ரோட்டரி சங்க தலைவரும், மேக்ரோ கல்லூரி நிறுவன தலைவருமான பொன்தங்கதுரை தலைமை தாங்கினார். இன்னர்வீல் தலைவர் ஜென்சி ராஜேஷ் முன்னிலை வகித்தார். பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோய் குறித்து டாக்டர்கள் ஆலோசனை வழங்கினர். இதில் ரோட்டரி சங்க கம்யூனிட்டி சர்வீஸ் தலைவர் டாக்டர் சங்கரன், முன்னாள் மாவட்ட ஆளுநர் நவமணி, முன்னாள் துணை ஆளுநர் முத்துகிருஷ்ணன், முன்னாள் தலைவர் சுப்பிரமணியன், செயலர் சுதிர்ந்தன், டாக்டர்கள் ஜேக்கப், ஜெய்கணேஷ், முன்னாள் தலைவர் பிரபா நவமணி, முன்னாள் தலைவர் வேல்முருகன், டாக்டர் தாமரைச்செல்வி கலந்து கொண்டனர். முடிவில், செயலர் சுகர்ந்தன் நன்றி கூறினார்.