கல்லூரி மாணவரை சாதியை சொல்லி திட்டி தாக்கியதாக 2 பேராசிரியர்கள் மீது வழக்கு

கல்லூரி மாணவரை சாதியை சொல்லி திட்டி தாக்கியதாக 2 பேராசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பரமக்குடி,
கல்லூரி மாணவரை சாதியை சொல்லி திட்டி தாக்கியதாக 2 பேராசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவர்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் தமிழ் இளங்கலை 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவர் ஒருவர், கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவின் போது தண்ணீர் குடிக்க வெளியில் சென்றார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்த அந்த மாணவரை ஆங்கிலத்துறை கவுரவ விரிவுரையாளர் ஜேசுதாஸ் (35) என்பவர் வழிமறித்து எங்கு சென்றாய்? என கேட்டார். அதற்கு அந்த மாணவர் தண்ணீர் குடிக்க சென்றதாக கூறியதாகவும், உடனே ஜேசுதாஸ் அந்த மாணவரை சாதியை சொல்லி திட்டியதாகவும் புகார் எழுந்தது.
9 பேர் மீது வழக்கு
மேலும் அந்த மாணவரை கல்லூரி நூலகத்திற்கு அழைத்து சென்று ஆங்கிலத்துறை பேராசிரியர் செல்லத்துரை, ஜேசுதாஸ் இருவரும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் வரலாற்று துறையில் முதுகலை பாடப்பிரிவில் பயின்று வரும் ஒரு மாணவர் தலைமையில் முன்னாள் மாணவர்கள் உள்பட 7 பேர் சேர்ந்து அந்த மாணவரை தாக்கினார்களாம்..
இது குறித்து அந்த மாணவர் கொடுத்த புகாரின் பேரில் பரமக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி விசாரணை நடத்தி, ேமற்கண்ட 2 பேராசிரியர்கள் உள்ளிட்ட 9 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.