மணல் கடத்திய 3 பேர் மீது வழக்கு


மணல் கடத்திய 3 பேர் மீது வழக்கு
x

மணல் கடத்திய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் பரணிகுமார் தனது உதவியாளருடன் தாப்பேட்டை கொள்ளிடக்கரை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது கொள்ளிடம் ஆற்றில் 3 பேர் 2 மொபட்டில் மணல் அள்ளிக்கொண்டு இருந்தனர். கிராம நிர்வாக அலுவலரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து, 2 மொபட் மற்றும் 4 மூட்டை மணலை பறிமுதல் செய்து தா.பழூர் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர்கள் தாதம்பேட்டை கிராமத்தை சேர்ந்த ராஜேஷ், மருதமுத்து, ரமேஷ் என்பதும் அவர்கள் 3 பேரும் மணல் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, பழுவூர் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து மணல் திருட்டில் ஈடுபட்ட 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்.


Next Story