முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு


முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு
x

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர்

கரூர் கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள மாவட்ட ஊராட்சிக்குழு அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் ஒன்று திரண்டனர். இதனால் போலீசார் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் கேட்டை மூடி இரும்பு தடுப்புகள் அமைத்து கட்சி நிர்வாகிகளை உள்ளே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க.வினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் கணேஷ் (என்கிற) முத்துக்குமார், தெற்கு பகுதி செயலாளர்கள் வி.சி.கே.ஜெயராஜ், நெடுஞ்செழியன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் மீது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story